லோக்சபா தேரத்லில்.. பாஜக.,விற்கு 3 இடங்கள் கிடைத்தால்.. தமிழ்நாடு அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?

Jun 02, 2024,05:58 PM IST

சென்னை :  லோக்சபா தேர்தல் 2024க்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி தமிழகத்தில் பாஜக., கூட்டணிக்கு 3 சீட்கள் வரை கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையானால் அடுத்து தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றிய ஒரு அலசல் இதோ...!


2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக., அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால் இதில் பாஜக வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். இதனால் 2014ல் பொன் ராதாகிருஷ்ணன் பெற்ற ஒரே ஒரு இடத்தையும் திமுக கூட்டணியிடம் பறிகொடுத்தது பாஜக. 




அதன் பிறகு, தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் என பாஜக., பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் பாஜக.,விற்கு கைகொடுக்கவில்லை. நோட்டாவை கூட முந்த முடியாத கட்சி என்ற நிலையில் தான் பாஜக.,வின் ஓட்டு வங்கி தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்புக்களின் படி தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 3 இடங்கள் அல்ல, ஒரே ஒரு இடம் கிடைத்தால் கூட அது பாஜக.,விற்கு பலமாகவே கருதப்படும். 


கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் அடிப்படையில் பாஜக.,விற்கு 3 அல்லது அதற்கு மேலான தொகுதிகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கலாம்.


ஒருவேளை அப்படி நடந்தால் தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். அதோடு அவருக்கு உறுதியாக மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதை விட முக்கியமாக பாஜக சார்பில் தமிழகத்தில் வெற்றி பெறும் அனைவரையும் கூட மத்திய அமைச்சர்களாக்கி, பாஜக தலைமை தமிழ்நாட்டை குஷிப்படுத்தவும் முயலலாம்.  ஜெயிப்பது ஒருவராக இருந்தாலும் ஏன் 4, 5 பேராக இருந்தாலும் கூட அத்தனை பேரையும் கூட மத்திய அமைச்சர்களாக்க பாஜக தயங்காது என்றே தெரிகிறது.




காரணம், இந்த வெற்றி பாஜக.,விற்கு 2026ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து சட்டசபையிலும் இடம்பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால் வெற்றி பெற்றவர்களை அமைச்சர்களாக்கி, அவர்கள் மூலம் பல்வேறு செயல்பாடுகளை தமிழ்நாட்டில் நிகழ்த்தி, கூடவே திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து, அதிமுகவையும் அடியோடு காலி செய்ய பாஜக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அப்படி தமிழகத்தில் பாஜக வளர துவங்கினால் அது திமுக மற்றும் அதிமுக,விற்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும். திராவிட கட்சிகளுக்கு மாற்றான மூன்றாவது சக்தியாக பாஜக.,வை மக்கள் ஏற்கும் நிலையும் ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்