புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சந்திர பிரியங்கா தனது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பயோக்களில் அமைச்சர் என்ற பெயரை எடுத்து விட்டார். தனது நிலைப்பாடு குறித்தும் அவர் தொடர்ந்து மெளனம் காக்கிறார்.
புதுச்சேரி அரசியலில் புதிய புயலைக் கிளப்பியவர் சந்திர பிரியங்கா. இளம் எம்எல்ஏவான அவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். நெடுங்காடு- கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். முதல்வர் ரங்கசாமியின் என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
மக்களின் மனம் கவர்ந்த எம்எல்ஏ
போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டு வந்த இவர் குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர்ந்தவர். மக்களுடன் இயல்பாக பேசிப் பழகி வந்தார். தொகுதி மக்களின் அன்பையும் பெற்றவர். இந்த நிலையில்தான் திடீரென சமீபத்தில் அவர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. முதல்வர் ரங்கசாமி, சந்திரபிரியங்காவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்தாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நீண்டதொரு கடிதத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டார் சந்திர பிரியங்கா. அதில் தான் ஜாதி ரீதியாகவும், பெண் என்று பாலின ரீதியாகவும் புறக்கணிக்கப்படுவதாகவும், இழிவுபடுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது இடத்துக்கு வன்னியர் அல்லது தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
டிஸ்மிஸ் செய்த ரங்கசாமி
ஆனால் சந்திர பிரியங்காவை ஏற்கனவே டிஸ்மிஸ் செய்து விட்டதாக சபாநாயகர் செல்வம் கூறவே குழப்பம் ஏற்பட்டது. அவர் ராஜினாமா செய்திருக்கிறாரா அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில்தான் அவரை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி முதல்வர் ரங்கசாமியே துணை நிலை ஆளுநர் தமிழிரை செளந்தரராஜனுக்குப் பரிந்துரை செய்திருப்பதும், அவர் அந்தக் கடிதத்தை மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. நேற்றுதான் இந்த ஒப்புதலை உள்துறை அமைச்சகம் அளித்தது. இதன் மூலம் சந்திர பிரியங்காவின் பதவி பறி போனது.
அமைச்சர் பதவி பறி போவதற்கு முன்பு வரை தனது டிவிட்டர் பயோவில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்து வந்தார் சந்திர பிரியங்கா. ஆனால் நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து டிவிட்டர் பயோவை அவர் மாற்றி விட்டார். அதில் வெறும் எம்எல்ஏ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
சந்திர பிரியங்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
அதேசமயம், அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.. என்ன செய்யப் போகிறார்.. ரங்கசாமி கட்சியிலேயே நீடிப்பாரா அல்லது வேறு கட்சிக்கு மாறுவாரா.. அப்படி மாறினால் பாஜகவுக்குச் செல்வாரா அல்லது வேறு கட்சிக்குப் போாரா என்று அடுத்தடுத்து கேள்விகள் எழுந்துள்ளன. இவரது தந்தை சந்திரகாசு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு போகவும் வாய்ப்புண்டு. காரணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, சந்திர பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கிறார். அவருக்காக பேசி வருகிறார். தமிழிசையின் தூண்டுதலால்தான் சந்திர பிரியங்காவை முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்துள்ளதாகவும் கூட அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே சந்திர பிரியங்கா எப்போது மெளனம் கலைப்பார்.. அடுத்து என்ன செய்வார் என்பது புதுச்சேரி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}