சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அணிக்குள்ளேயே கூட ரோஹித்துக்கு ஆதரவான குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் டிவீட் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அதை விட முக்கியமாக சிஎஸ்கே அணி ரோஹித்தை பாராட்டி போட்ட டிவீட்டுக்கு, ரோஹித்தின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டின் போட்டு பரபரப்பை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளார்.
ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பிருப்பதாக பிரபல ஸ்ரீனி மாமாவும் டிவீட் போட்டு ரசிகர்களின் இதயங்களை எகிற வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 வருடம் அசத்தலான பயணத்தை மேற்கொண்டவர் ரோஹித் சர்மா. இதில் 5 முறை கப் அடித்து சாதனை படைத்துள்ளார். தோனியை விட அதிக கப் அடித்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது. மும்பை மண்ணின் மைந்தரான சச்சின் டெண்டுல்கரால் கூட ஐபிஎல்லி ஜொலிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மா தனது அருமையான கேப்டன்சியால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் வகையில் மும்பையை மாற்றி வைத்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}