சென்னை : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிப்படைந்து வருகிறது. கூட்டணிகள் ஏறக்குறைய முடிவாகி விட்டதால் தற்போது வெற்றி வாய்ப்புகள் குறித்த கள நிலவரங்களை ஆராய வேண்டிய நிலை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. வட தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றி வாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் திடீர் 'யு-டர்ன்' முடிவும், பாமகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் இதற்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
பிரேமலதாவின் அதிரடி முடிவு:

கடைசி நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக பிரேமலதா விஜயகாந்த் திமுக தலைமையிலான கூட்டணியை நோக்கி நகர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட தமிழகத்தில் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ள தேமுதிக, பல தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகள் வரை தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. இந்த வாக்குகள் இப்போது எதிரணிக்குச் செல்வது அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவாகும்.
பாமகவில் தந்தை - மகன் மோதல்:
மற்றொரு பக்கம், வட தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியான பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒரு நிலைப்பாட்டிலும், அன்புமணி ராமதாஸ் மற்றொரு நிலைப்பாட்டிலும் உள்ளனர். இதற்கிடையில் கட்சியும், சின்னமும் யாருக்கு என்ற சட்ட போராட்டம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்கிறது. அன்புமணி என்டிஏ கூட்டணியில் இணைந்து விட்டதால், ராமதாஸ் தனித்துப் போட்டியிடவோ அல்லது வேறு முடிவெடுக்கவோ திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் ராமதாஸ் இதுவரை தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வன்னியர் சமூக வாக்குகளைப் பிரிக்கும் இந்த உட்கட்சி மோதல், கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அரசியல் தாக்கங்கள்:
ராமதாஸ் யார் பக்கம் செல்ல போகிறார் என்பது முடிவு செய்யப்படாமல் இருப்பதால் திமுக-அதிமுக இரண்டு கூட்டணிகளிலுமே இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்பது இறுதி வடிவம் பெறாமல் உள்ளது. ஆனால் தேமுதிக, திமுக கூட்டணி சென்றதால் தங்களின் வாக்குகளும், வெற்றியும் பாதிக்காது என அதிமுக தலைவர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் ராமதாஸ் எடுக்கப் போகும் முடிவு தான் வன்னியர் சமூக வாக்குகள் யாருக்கு செல்லும் என்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக.,வின் செல்வாக்கு :
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் முக்கியத் தேர்தல் இது என்பதால், அனுதாப வாக்குகளைக் கவர பிரேமலதா எடுக்கும் இந்த முயற்சி முக்கியமானது. தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பாமக, தேமுதிக.,விற்கு எப்போதும் வலுவாக ஓட்டுக்கள் இருக்கும். இப்போது அங்கு நிலவும் விரிசல் மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக அமையலாம். இதில் தேமுதிக கேட்டு பெற போகும் தொகுதிகள், பாமக ராமதாஸ் எடுக்க போகும் முடிவு ஆகியவை தான் அவர்களின் ஓட்டு வங்கியையும், அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு.. சுவாமிமலை முருகன் கோவில்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
"மேம் எங்க இறங்க போறீங்க?".. அவளின் (ல்) அவன் (3)
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
ஜெயலலிதா பிறந்தநாள்...பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா புகழஞ்சலி
பிரேமலதாவின் கூட்டணி முடிவு...வடதமிழகத்தில் என்டிஏ.,விற்கு பாதிப்பை தருமா?
என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் 2026 வெளியீடு...மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்
{{comments.comment}}