சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட போவது யார்? இந்த முறையும் காங்கிரசிற்கே ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்படுமா அல்லது திமுக.,வே களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலை பரபரக்க வைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, நேற்று இடைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 05ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடத்தப்படுவதாக அறிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் கண்காணிப்பு அறை அமைத்து, தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்து வருகிறது. அதற்கு முன் தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்த தொகுதியை பிடித்திருந்தாலும், இந்த தொகுதி காங்கிரசின் கோட்டையாக பல காலமாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகனும், அவருக்கு பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால் இருவருமே பதவிக்காலம் முடிவதற்கு முன்பே உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர்.
இதனால் அனுதாப அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்த முறையும் காங்கிரசிற்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இன்றைய தேதியில் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு வாய்ந்தவர்கள் குறைவாகவே உள்ளனர். மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அது காங்கிரசிற்கு நிச்சயம் பின்னடைவாகவே இருக்கும். அதனால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவதே சரியாக இருக்கும்.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் வேட்பாளராக நிறுத்தாமல் திமுக.,வை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் தமிழகத்தில் இன்று நிலவி வரும் அரசியல் சூழல், பிரச்சனைகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, தமிழக மக்களிடம் ஆளும் கட்சியான திமுக.,விற்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாய சூழல் உள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக.,வே போட்டியிட முடிவு செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் முன்பு உறுப்பினராக இருந்தவர் வி.சி.சந்திரகுமார். இவர் தேமுதிகவில் முக்கியப் புள்ளியாக வலம் வந்தவர். மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தேமுதிக உடைந்தபோது இவரும் வெளியே வந்தவர். பின்னர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். நீண்ட காலமாக இவர் எம்எல்ஏ பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். பிற கட்சிகளிலிருந்து திமுகவுக்குத் தாவி வந்தவர்களில் பலருக்கும் திமுகவில் நல்ல பதவிகள் கிடைத்துள்ளன. ஆனால் வி.சி.சந்திரகுமார்தான் இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளார். எனவே இந்த முறை கட்சி தனக்கு சீட் தருமா என்ற ஆவலிலும், எதிர்பார்ப்பிலும் வி.சி.சந்திரகுமார் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதை கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடைத் தேர்தல் என்பதால் இதில் திமுக போட்டியிட்டு விட்டு, 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு கூடுதல் சீட்டுக்கள் ஒதுக்கப்படுவதற்கும் கூட வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}