மதுரை: தவெக 2வது மாநில மாநாட்டை முன்கூட்டியே நடத்தப் போவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் இதற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்து, அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு ஜூலை 15ம் தேதியே போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டும், அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு போலீசார் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால் அதற்கு தமிழ்நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும். ஆகஸ்ட் 25ம் தேதி மாநாடு நடத்தினால் தொடர்ச்சியாக போலீசாருக்கு ஓய்வு இல்லாமல் பணி வழங்குவது சிரமமாக இருக்கும். அதோடு மாநாட்டிற்கும் போதுமான பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்பது தான். இதனால் மாநாட்டை ஆகஸ்ட் 18 முதல் 22 வரையிலான ஏதாவது ஒரு தேதிக்கு மாற்றி வைத்துக் கொள்ளும் படி போலீசார் தரப்பில் வாய்மொழியாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
போலீசாரின் கோரிக்கையை ஏற்று, தற்போது ஆகஸ்ட் 21ம் தேதி வியாழக்கிழமை மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய், நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது புதிய மாநாட்டு தேதியை குறிப்பிட்டு, போலீசாரிடம் பாதுகாப்பும் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதியில் போலீசார் அனுமதி அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், மாநாட்டிற்கு இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ளது. மாநாட்டிற்கான வேலைகள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கவனிக்கப்பட்டு வந்தாலும் போலீசார் புதிதாக ஏதாவது கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது. போலீசார் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாநாட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும்.
போலீசாரின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு மீண்டும் போலீசாரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதனை சரி பார்த்த பிறகு தான் போலீசார் மாநாட்டிற்கு அனுமதி அளிப்பார்கள். இது தான் வழக்கமான நடைமுறை. ஆனால் இவை அனைத்தும் இந்த 2 வார காலத்திற்குள் நடத்தி முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.
அதோடு அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டால் புதிய தேதியும் தவெக மாநாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது சூழல் ஏற்பட்டாலோ அல்லது போலீசார் இந்த முறையும் அனுமதி அளிக்க தாமதித்தாலோ தவெக நிச்சயம் கோர்ட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு முன் மதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷித் நடத்திய முருகன் மாநாட்டிற்கும் இதே போல் போலீசார் தரப்பில் அனுமதி வழங்க தாமதித்ததால், அவர்கள் கோர்டிற்கு சென்று மாநாட்டிற்கு அனுமதி பெற்றார்கள். அதே போல் தவெக.,வும் கோர்ட்டின் துணை மற்றும் வழிகாட்டுதலுடன் மாநாட்டை நடத்தவும் வாய்ப்புள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}