சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு அதிகம் இருப்பதால் இங்கு ஆம்னி பஸ்கள் இன்று இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரத்திற்கும் மேலாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்ததால் இங்கு பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதக்கின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை நகரங்கள் நீரில் மிதிக்கின்றன. காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இப்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது.

இதேபோல தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அதீத வெள்ள பாதிப்பை சந்தித்த நெல்லை, குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் இணையதளத்தில் ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.
அதில், பத்திரிகைகளில் உலா வருவது போல எந்த முடிவையும் இதுவரை நாங்கள் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களது சேவையில் 80 சதவீத சேவை தொடர்கிறது. இன்றும் வழக்கம் போல எங்களது சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது மேற்கண்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பஸ்களை இயல்பான முறையில் இயக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே சில ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது நினைவிருக்கலாம். அரசு பஸ்களும் கூட சூழலுக்கேற்பவே இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே அதேபோலவே ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்களும் சூழலுக்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!
நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!
சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!
{{comments.comment}}