தெலுங்கிலிருந்து தமிழுக்கும் வாங்க.. ஸ்ரீலீலா.. ரசிகர்கள் பாடத் தயாரா இருக்காங்க "லா..லா"!

Jan 19, 2024,10:23 AM IST
ஹைதராபாத்: தெலுங்கைக் கலக்கும் ஸ்ரீலீலா.. தமிழுக்கும் வருவாரா.. என்ற எதிர்பார்ப்பு புயலைக் கிளப்பி வருகிறது. அவரது புரபைல் பார்த்தீங்களா.. வேற லெவல்ல இருக்காருங்க. தெலுங்கு ரசிகர்கள் தங்களது இதயத்தில் வைத்துக் கொண்டாடி வரும் லேட்டஸ்ட் ஹார்ட்த்ரோப் யார் தெரியுமா.. ஸ்ரீலீலா தான்!

ஸ்ரீலீலாவின் பயோடேட்டாவைப் பார்த்தாலே மிரட்டலாக இருக்கிறது. வேற லெவல் ஆளா இருப்பார் போலயே என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது.

வயது 22தான்.. அப்பாவும், அம்மாவும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அம்மா ஸ்வர்ணலதா ஒரு டாக்டர். அப்பா தொழிலதிபர். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில்தான் முதலில் வசித்து வந்தனர். அங்குதான் ஸ்ரீலீலாவும் பிறந்துள்ளார். அதாவது இவர் ஒரு அமெரிக்க சிட்டிசன் மக்களே.. அமெரிக்க சிட்டிசன்!



இவர் வயிற்றில் இருக்கும்போதே கணவரை விட்டுப் பிரிந்து விட்டார் ஸ்வர்ணலதா. குழந்தை பிறந்த பிறகு பெங்களூருக்கு தாயார் ஷிப்ட் ஆகவே, ஸ்ரீலீலாவின் குழந்தைப் பருவமும் பெங்களூரிலேயே கழிந்தது. 

சின்ன வயதிலேயே டான்ஸ் மீது ஏகப்பட்ட பற்றும், வெறியும் இருந்துள்ளது. இதனால் பரதநாட்டியம் கற்க ஆரம்பித்து அதில் எக்ஸ்பர்ட் ஆகி விட்டார்.  கால்கள் நடனம் ஆட.. மனசோ நடிப்பை நாட.. பிறகென்ன ஒரு சுபயோக சுப தினத்தில் நடிகையானார். 

எடுத்தவுடனேயே "கிஸ்"தான்.. அதாவது படத்தைச் சொன்னோம் பாஸ்.. கிஸ் என்ற கன்னடப் படத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார் ஸ்ரீலீலா. ஒரே ஆண்டில் இரண்டு  கன்னடப் படங்களில் நடித்த அவருக்கு 3வதாக தெலுங்குப் பட வாய்ப்பு கிடைத்தது.  அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடித்த அவருக்கு தெலுங்குத் திரையுலகம் கதவுகளை அகல திறந்து வைக்கவே அங்கேயே முழுவீச்சில் களமாடத் தொடங்கினார் ஸ்ரீலீலா.



தற்போது முழுமையாக தெலுங்கு நடிகையாகவே மாறி விட்ட ஸ்ரீலீலா  ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார். இந்த இளம் வயதிலேயே சைமா சிறந்த நடிகை விருது கூட வாங்கி அசத்தியுள்ளார். இதுவே பிற திரையுலகினரின் பார்வையையும் இவர் மீது படர விட்டுள்ளது. தமாகா என்ற தெலுங்குப் படத்திற்காக கிடைத்த விருது இது.

இப்போது ஸ்ரீலீலாவை தமிழுக்குக் கொண்டு வர ஒரு முயற்சி நடந்து வருகிறதாம். விஜய் மாதிரி பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் ஸ்ரீலீலாவும். நல்ல கதை, சூப்பர் ஹீரோ கிடைத்தால் வருவேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

நீங்க வாங்க.. ஸ்ரீலீலா.. ரசிகர்கள் பாடத் தயாரா இருக்காங்க "லா..லா"!

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்