சென்னை: தி கோட் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை காலை மணிக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. நாளை மட்டும் 5 காட்சிகளை திரையிட்டுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்து முடித்துள்ளார். இவருடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, வைபவ், அஜ்மல், அரவிந்த், உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே வெளியாக தயாராக இருக்கும் கோட் படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரேம்ஜி, நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவில் இதற்கு முன் எந்த படத்திலும் இது போன்ற ஆச்சரியங்களை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு சீன்களுக்கும் விசில் அடிப்பீர்கள். நான் படத்தை நிறைய தடவை பார்த்து விட்டேன் என கூறி வருகிறார்.
அத்துடன் படம் குறித்த புதிய புதிய அப்டேட்டுகளையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். இதனால் தி கோட் படம் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கேரளா- புதுச்சேரியில் சிறப்புக் காட்சிகள்
இந்நிலையில், இப்படத்திற்கு அதிகாலை நடைபெறும் சிறப்பு காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் திகைத்துள்ளனர். அதேபோல புதுச்சேரியிலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டிலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதாவது நாளை மட்டும் காலை 9 மணிக்கு ஒரு காட்சியை கூடுதலாக திரையிட்டுக் கொள்ளலாம். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்குள் படத்தை முடித்து விட வேண்டும். நாளை மட்டும் 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற நாட்களில் 4 காட்சிகள் திரையிடப்படும்.
அதேசமயம், தற்போது தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்பதால் அதற்கான அனுமதி கோட் படத்துக்கும் கிடைக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}