தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?

Aug 05, 2025,10:33 AM IST

மதுரை : தவெக.,வின் 2வது மாநில மாநாட்டின் தேதியை வேறு தேதிக்கு மாற்ற போலீசார் கோரிக்கை வைத்துள்ளதால் இன்று மாநாடு நடக்கும் புதிய தேதியை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.


தவெக தனது 2வது மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்து, அதற்கான வேலைகளும் மிக தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டிற்கு அனுமதி கேட்டு ஜூலை 15ம் தேதியே தவெக சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதற்கு போலீசார் தரப்பில் சொல்லப்படும் காரணம், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினம் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும். ஆகஸ்ட் 25ம் தேதி மாநாடு நடத்தினால் போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் மாநாட்டு தேதியை மாற்றி வைக்கும் படி யோசனை வழங்கி உள்ளனர்.





போலீசாரின் கோரிக்கையை ஏற்று தவெக.,வும் மாநில மாநாட்டை ஆகஸ்ட் 18 முதல் 22 வரை ஏதாவது ஒரு தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜய் இன்று புதிய தேதியை, அதாவது ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு முன்பே மாநாட்டை நடத்த போவதாக அறிவித்தால், புதிய தேதியை குறிப்பிட்டு போலீசாரிடம் அனுமதி கேட்டு, புதிய மனு அளிக்கப்படும். இதற்கும் போலீசார் அனுமதி தர மறுத்தாலோ அல்லது தாமதித்தாலோ கோர்ட்டில் சென்று முறையிடவும் அக்கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சட்ட விதிகளின்படி பார்த்தால் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் மாநாடு, பேரணி, ஆர்ப்பாட்டம் என நடத்த உரிமை உண்டு. அவர்களை சட்ட ஒழுங்கு அல்லது வேறு ஏதாவது காரணம் காட்டி வேறு தேதிக்கு மாற்றும் படி அறிவுறுத்தல் வழங்கலாமே தவிர அனுமதி மறுப்பதற்கு போலீசாருக்கு அதிகாரம் கிடையாது. இதை நீதிபதிகளின் பல தீர்ப்புகள், உத்தரவுகள் உறுதி செய்துள்ளன. அப்படி பார்த்தால் தவெக மாநாட்டிற்கு போலீசார் அனுமதி வழங்க முடியாது என சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்ல வேண்டும். உண்மையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே தவெக மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதை தாமதப்படுத்தி வருவதாக தவெகவினர் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.


ஒருவேளை புதிய தேதியில் மாநாட்டை நடத்தவும் அனுமதி வழங்குவதற்கு போலீசார் தரப்பில் மறுக்கும் அல்லது தாமதிக்கும் பட்சத்தில் தவெக கோர்ட்டிற்கு சென்றால் அது போலீசாருக்கும், திமுக.,விற்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் தவெக.,விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிப்பதுடன், திமுக மீதான அதிருப்தி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தவெக நடத்திய முதல் மாநாட்டின் போது, "ஏதோ புதிதாக கட்சி துவங்கியவர் மாநாடு நடத்துகிறார். நடிகர் என்பதால் இளைஞர் கூட்டம் சேர்ந்து விட்டது" என பலரும் சாதாரணமாக நினைத்தாகள். ஆனால் தவெக.,வின் 2வது மாநாட்டிற்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டால் அது நிச்சயம் தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


திமுக, அதிமுக உடன் மட்டும் கூட்டணி வைப்பது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் தவெக பக்கம் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. காரணம், திமுக, பாஜக தவிர கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்போம் என்றும், கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என விஜய் முதல் மாநாட்டிலேயே அறிவித்து விட்டார். தேர்தலில் கூடுதல் சீட், வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு என விஜய் சொல்லும் போது மற்ற கட்சிகள் மத்தியில் கண்டிப்பாக அது தாக்கத்தை ஏற்படுத்தும்.


அதே போல, விக்கிரவாண்டி மாநாட்டில் எப்படி அதிரடியாக விஜய் ஆட்சியில் கூட்டணி என்று அறிவித்தாரோ அதேபோல மதுரை மாநாட்டிலும் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!

news

தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

news

மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்

news

தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?

news

ஓவலில் இந்தியா அதிரடி.. 6 ரன் வித்தியாசத்தில் ஸ்டன்னிங் வெற்றி.. டெஸ்ட் தொடர் சமன்!

news

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

அருணாச்சலப் பிரதேச விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

news

வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்