சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுக-திமுக இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், விஜய் என்ன செய்வார் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. இதனால் தமிழக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். ஆனால் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என திட்டவட்டமாக கூறி விட்டார் கவர்னர். தேர்தலில் பெரும்பான்மை பெரும் கட்சி ஆட்சி அமைத்து விட்டு, அடுத்த 15 நாட்களுக்குள் அல்லது கவர்னர் கூறி கால அவகாசத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது தான் அரசியல் சாசன சட்டம் விதி சொல்கிறது.இதனால் கவர்னரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் ஆதரவு தருவதாக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸின் 5 எம்எல்ஏ.,க்களை சேர்த்தாலும் விஜய் முதல்வராக ஆதரவு தரும் என்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 112 ஆக மட்டும் உள்ளது. விஜய் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 117 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இதனால் இன்னும் 5 எம்எல்ஏ.,க்களின் ஆதரவை பெறுவதற்காக திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளிடம் தவெக சார்பில் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது.
தவெக.,விற்கு ஆதரவு அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க இந்த 3 கட்சிகளும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் விஜய் முதல்வராவதையும், அவர் தலைமையில் ஆட்சி அமைவதையும் தடுக்க அதிமுக-திமுக இணைந்து பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அதிமுக-திமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தால், தவெக.,வின் 108 எம்எல்ஏ.,க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்காக தவெக எம்எல்ஏ.,க்கள் கூட்டமும் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
ஒருவேளை தவெக எம்எல்ஏ.,க்கள் 108 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்தால் அது மிகப் பெரிய சட்ட சிக்கலை ஏற்படுத்தும். அப்படி நடந்தால் சட்டசபையில் இருக்கும் எம்எல்ஏக்களின் பலம் அடிப்படையில் திமுக தனித்தே ஆட்சியமைக்க முடியும். காரணம் 108 பேர் ராஜினாமா செய்தால் மீதம் உள்ள எம்எல்ஏக்கலின் பலத்தின் அடிப்படையில் பெரும்பான்மை பலம் 63 ஆக குறைந்து விடும். அதாவது இடைத் தேர்தல் நடந்து முடியும் வரை திமுக அரசு தனித்தே செயல்பட முடியும்.
இருந்தாலும் 234 உறுப்பினர்களில் காங்கிரசின் 5 எம்எல்ஏ.,க்கள் நீங்கலாக பார்த்தாலும் 121 பெரும்பான்மை இருப்பதால் அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏதும் ஏற்படாது. ஆனால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை திராவிட கட்சிகளுக்கு எதிராக ஏற்படுத்தும். அந்தக் கட்சிகளுக்கு தமிழ்நாடு நிரந்தரமாக குட்பை சொல்லும் சூழலும் ஏற்படும்.
ஒரு வேளை பாஜகவின் உண்மையான மெகா திட்டமே இதுதானோ!!
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}