தஞ்சாவூர்: சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா விசித்திரராஜபுரம் கிராமத்தில் வசித்து வந்த பிரபாகர் என்பவரது மனைவி கோகிலா (33). பிரபாகர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கோகிலா கபிஸ்தலம் என்ற இடத்தில் வாட்ச் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று செல்போனில் சார்ஜ் போட்டபடி ஹெட் போன் போட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் வெடித்து கடை முழுவதும் தீ பரவியது. கோகிலா உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கபிஸ்தலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்த கோகிலாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கபிஸ்தலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசும்போது செல்போன் வெடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்போன் பேசும்போது கவனம் தேவை
எத்தனையோ முறை செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து நிபுணர்கள் சொல்லி விட்டார்கள். ஆனாலும் மக்கள் இன்னும் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள். சார்ஜ் போட்டபடி பேசுவது, செல்போனை தலையணைக்கு கீழே வைத்துக் கொண்டு படுத்துத் தூங்குவது, செல்போனை தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்குவது, இரவு முழுவதும் விடிய விடிய சார்ஜரில் போட்டு சார்ஜ் ஏற்றுவது போன்ற செயல்கள் எல்லாம் ஆபத்தானவை.
விபத்துக்கு வழி வகுக்கக் கூடிய இதுபோன்ற செயல்களை தயவு செய்து நாம் தவிர்க்க வேண்டும். செல்போன் என்பது ஒரு சாதாரண தகவல் பரிமாற்ற சாதனம்தான். அதை அந்த அளவுக்குத்தான் நாம் ட்ரீட் செய்ய வேண்டும். சார்ஜ் போட்டு முடித்து பிறகு பேசிக் கொள்ளலாமே.. அப்படி பேசியே ஆக வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.. கோகிலாவின் தவறால், தற்போது அந்தப் பெண்ணின் மகன்தான் பாவம் அநாதவராகியுள்ளான்.
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
{{comments.comment}}