புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க வந்த தமன்னா!

Sep 21, 2023,05:36 PM IST
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட இன்றும் நடிகைகள் பலர் வந்திருந்தனர். தமன்னா, குஷ்பு உள்ளிட்டோர் அவர்களில் அடக்கம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இந்த நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே அங்கு "சந்திரமுகி" கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் சிறப்புப் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.



இந்த நிலையில் இன்று 2வது நாளாக மேலும் பல நடிகைகள் வந்திருந்தனர். நம்ம ஊர் குஷ்பு, "ஜெயிலர்" தமன்னா உள்ளிட்டோர் வந்திருந்தனர். சிவப்பு நிற சேலையில் பளிச்சென காணப்பட்டார் தமன்னா.  புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்து விட்டு வந்த தமன்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இதுவரை புதிய நாடாளுமன்றத்திற்கு அரசு அழைக்கவில்லை. அதற்குப் பதில் துறவிகள், சாமியார்கள், மடாதிபதிகள், நடிகைகளை அழைப்பதா என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்