கருவைச் சுமக்கும் பெண்கள் இனி.. கருவறைக்குள்ளும் நுழைவார்கள்.. மு.க.ஸ்டாலின்

Sep 14, 2023,02:03 PM IST
சென்னை:  கருவைச் சுமக்கும் பெண்கள் நுழைய முடியாத இடமாக கோவில் கருவறைகள் இருந்தன. இனி வரும் நாட்களில் கோவில் கருவறைக்குள்ளும் பெண்கள் நுழைவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற புரட்சித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லுபடியாகும் என்று அதிரடியாக தீர்ப்பளித்து விட்டது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து தேறியவர்களுக்கு சான்றிதழ் அளித்து பணி நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அர்ச்சகர்களில் 3 பேர் பெண்கள்  ஆவர்.

இதுகுறித்து பெருமிதம் வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்... என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்