- தா. சிலம்பரசி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று அனுசரிக்கப்படும் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம், நாம் “வேறுபாடு” என்று கருதும் பல தனித்துவங்களின் பின்னால் இருக்கும் அற்புதமான மனித நேயத்தையும் உள் ஒளியையும் உணர்த்தும் ஒரு முக்கியமான நாள்.
ஆட்டிசம் என்பது குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான உலகத்தை பார்க்கும் விதம். சிலர் சொற்களில் பேசுவார்கள்; சிலர் கண்களில் பேசுவார்கள். சிலர் சத்தமில்லா அமைதியின் வழியே உணர்வுகளை பகிர்வார்கள். அவர்கள் மௌனம் பலவீனம் அல்ல, அளவற்ற திறன்களின் மறைமுகம்.

இந்த நாளின் நோக்கம்,
அவர்களை “சிறப்பு குழந்தைகள்” என்று பிரித்து விடுவது இல்லை; அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை, பொறுமை, பாதுகாப்பு, அன்பு வழங்குவதே. இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது:
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு மலராய் மலர்கிறது.
அவர்களின் வேகமும், வழியும் மாறலாம்; ஆனால் அவர்களின் மதிப்பு குறையாது. அவர்களை புரிந்து கொள்வதே உண்மையான கல்வி. அவர்களை பாதுகாப்பதே சமூகத்தின் பொறுப்பு.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒரு குழந்தையின் கையைப் பிடித்து “நீ தனியாக இல்லை… நாங்கள் உன் பக்கமே இருக்கிறோம்” என்று சொல்லும் மனிதநேயத்தின் நாள்.
உணர்வுகளை புரிந்துகொண்டு அணைத்தாற்போல் ஏற்றுக்கொள்வோம்… அவர்களின் உலகத்தை ஒளிரச் செய்வோம்.
(தா சிலம்பரசி, வேலூர் மாவட்டம்)
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
{{comments.comment}}