சென்னை அயலகத் தமிழர் நாள் விழாவில்.. வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புத்தக கண்காட்சி

Jan 11, 2025,12:19 PM IST

சென்னை : சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் புத்தக கண்காட்சி இடம்பெற்றுள்ளது. 


அயலகத் தமிழர் நாள் விழா தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11யான இன்று தொடங்கி, நாளை வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். 




தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் அயலகத் தமிழர் நாள் விழாவை தொடர்ந்து ஜனவரி 16, 17,18 ஆகிய தேதிகளில் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.


2025 ம் ஆண்டின் அயலகத் தமிழர் நாளின் கருப்பொருளாக "எத்திசையும் தமிழணங்கே" என திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 11 அன்று பிற்பகல் அயலகத் தமிழர் தின விழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். 




இந்த புத்தகக் கண்காட்சியில் அயலகத் தமிழர் படைப்பாளிகள் எழுதிய புத்தகங்களும் காட்சி அரங்கில் இடம்பெற உள்ளன. இதில் வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தை சேர்ந்த முனைவர் இர.பிரபாகரன், திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை, ஷீலா ரமணன், இலந்தை க.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற உள்ளன. 


இந்த புத்தக கண்காட்சியை பார்த்தசாரதி, ஆரூர் பாஸ்கர், கவிஞர் மருதயாழினி பிரதீபா, சுபா.காரைக்குடி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்ய உள்ளனர்.




வட அமெரிக்காவில் இருந்த படியே இணையத்தின் வழியாக புதுவை முருகு, கவிஞர் வி.கிரெஸ் பிரதிபா ஆகியோர் வரவேற்பு வழங்க உள்ளனர். புத்தக காட்சி ஒருங்கிணைப்பினை ஷீலா ரமணன், நறுமுகை ஆகியோர் கவனிக்க உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

news

இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!

news

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு

news

உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!

அதிகம் பார்க்கும் செய்திகள்