மதுரை: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் உலக சுற்றுலா தினத்தை நிறுவியது. இதனை தொடர்ந்து உலகில் உள்ள சுற்றுலா தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

மேலும் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்ச்சிக்காவும் நேரத்தை செலவிட்டு சுற்றுலா சேவையை பயன்படுத்தி வருவதே இதன் நோக்கமாகும். அதிலும் உளவியல் ரீதியாக டென்ஷனைப் போக்கி மன அமைதியைப் பெறவே சுற்றுலா சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதனால் மக்கள் சமீப காலமாகவே தொடர் விடுமுறை நாட்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சென்று சுற்றுலா சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியார் சுற்றுலா நிறுவனங்களுடன் இணைந்து மாநிலங்களின் சுற்றுலா வளர்ச்சிக்காக, மக்களின் தேவைகளுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் வரும் செப்டம்பர் 27 மற்றும் 28ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளும் நடைபெற உள்ளன. அரசு சார்பில் அனுசரிக்கப்படும் இந்த உலக சுற்றுலா தின விழாவிற்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}