பார்க்காப் பயிரும் கெடும்.. அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகள் (1)

Oct 09, 2026,04:54 PM IST

- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்


நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை நாம் விளக்கத்துடன் பார்க்கப் போகிறோம். நமக்காக இந்த விளக்கத்துடன் கூடிய அவ்வையின் மொழிகளை தொகுத்தளிக்கிறார் கவிக்கடல் அ.ல.ஏகலைவன்.


பருவத்தை நாடியே பக்குவமாய் நெல்லை

நெருக்கியும் நட்டவர்க்கும் நல்ல-தருணமும்

ஆர்க்கமெழ அன்றாடம் ஆய்ந்தே வயல்வாழும்

பார்க்காப் பயிரும் கெடும்.




வேண்டிய தவத்தாலே வாய்த்தபிள்ளை என்றாலும்

ஆண்டதில்  எல்லாம் அளவொத்தல்- காண்பநலம்

நேசத்தின் உச்சம் நிலையிலாது வார்த்திட்ட

பாசத்தால் பிள்ளையும் பாழ்


விளக்கவுரை இரு பாடலுக்கும்


பருவம் பார்த்திருப்பர் பக்குவமாய் நெல் விதைத்து இருப்பர் தருணம் காத்திருந்து அன்றாடம் நெல்வயலை பாரதிருந்தால் விளைந்த பயிர்கள் யாவும் கெடும்.


அதுபோலவே தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதினால் மட்டற்ற பாசத்தை கொடுத்துவிட்டு பின் அது செய்யும் தவறுகளை திருத்த நேரும் பொழுது பிள்ளையின் கெட்ட பழக்க வழக்கம் கேட்டையே தரும். 


(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்