சென்னை: பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த நந்தவனம் பவுண்டேசன் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சாதனைப் பெண்கள் விருது 2025 வழங்கப்பட்டது. இதற்கான விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தி விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், திருச்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் டாக்டர் கே. சீனிவாசன், இலங்கை தினகரன் நாளிதழ் முதன்மை ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மதுரை தங்கமயில் ஜுவல்லரி நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி வி. விஸ்வநாராயன், இலங்கை வீரகேசரி நாளிதழ் முதன்மை ஆசிரியர் ஸ்ரீகஜன், சென்னை லிட்டில் பிளவர் குழும தலைவர் ஜான் சேவியர், உலகளாவிய தமிழ்ப் பள்ளி இணை நிறுவனர் ராதிகா ஹரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தனவனம் சந்திரசேகரன், செயலாளர் எம். சாதிக் பாட்சா, பொருளாளர் பா. தென்றல் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த விழாவில் சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி உள்பட 25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண்கள் 2025 விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இவர்களில் மலேசியாவில் இருந்து 8 பேரும், இலங்கையிலிருந்து 3 பேரும், பின்லாந்திலிருந்து ஒருவரும் அடக்கம். மற்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த துறையில் சிறந்து விளங்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்
{{comments.comment}}