- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
வீட்டைச் சுற்றி குடியிருந்த பசுமைத் தோட்டம்...,
இட நெருக்கடியால், சுதந்திரமாய் வேர் விட முடியாத ...,
மொட்டை மாடிக்கு
இன்று குடியேறிவிட்டது..!!
காமத் தீயில் வெந்து போனது, காமுகனின் மனசு.
வலி தாங்க முடியாமல் கதறுகிறாள் ...
ஏன் எனப் புரியாத சிறுமி..!!
சுமை தாங்கும் தோள்கள்..!!
சுழலும் பூமிக்கு அதுவே அச்சாணி..!!
இன்றைய உலகப் பார்வையில்
அவன் ஒரு ஏமாளி..!!
உழைப்பே உயிர் மூச்சு ..!!
உலகம் உய்யும் உன்னால்..!!
உன் வியர்வைத் துளிகள்
உலகின் சக்கரம்..!!
நெகிழியால் மூழ்கிய குப்பை மேடு.
பூமி அழுகிறது.
ஒரு முறை மட்டுமே உபயோகம்.
நிரந்தர பாதிப்பு.
நெகிழி தரும் பாடம்.
அடக்குமுறை வேண்டாம்.
ஆண் பெண் சமமே.
உலகம் செழிக்கும்.
சங்கிலிகள் உடைப்போம் .
சுதந்திரம் பெறுவோம் .
சரித்திரம் படைப்போம் .
வீடு அலுவலகம் இரட்டை சுமை.
தன்னந்தனியாய் போராட்டம்.
வாழா வெட்டி என்று பெயர்.
அணியும் ஆடையில்
தன்னம்பிக்கை பூக்கும்.
ஆடை நாகரிகம்.
வண்ண வண்ணக் மெல்லிய குழாய்கள்.
லெக்கின்ஸ் விலையோ குறைவு.
எக்கச்சக்க லாபம்.
உடல் வளைவுகள் காட்டும் லெக்கின்ஸ்.
வயிற்றுப் குழி காட்டும் டாப்ஸ்.
கண்கள் தானாக மூடிக் கொள்கிறது.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
திருப்பூரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்!
Are you Ok?.. கேட்டதுமே அழுது விட்ட ஜனனி பொற்கொடி.. ஒரு நெகிழ்ச்சிக் கதை... say bye to STRESS!
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கொத்தவரங்காய் துவையல்.. ஈஸியா பண்ணலாம்.. சூப்பர் டேஸ்ட்டியா இருக்கும்!
அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!
அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!
{{comments.comment}}