டோரன்டோ: WWE எனப்படும் உலக மல்யுத்த பொழுதுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஜான் செனா அறிவித்துள்ளார். இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
WWE போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இதற்கென்று பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜான் செனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட வீரர்தான் ஜான் செனா. இந்த நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார் ஜென் செனா.
கனடாவின் டோரன்டோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ஜான் செனா. தனது கடைசி போட்டி 2025ல் இருக்கும் என்றும், அத்துடன் தான் விடை பெறுவதாகவும் அறிவித்தார் ஜான் செனா.
கடந்த 20 வருடமாக WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார் ஜான் செனா என்பது நினைவிருக்கலாம். தான் வந்தபோது இருந்ததை விட இப்போது WWE போட்டிகள் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக பெருமிதம் வெளியிட்டுள்ளார் ஜான் செனா.+
2025ம் ஆண்டு ரெஸில்மேனியா நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொள்ளவுள்ளார் ஜான் செனா. அதுதான் அவரது கடைசி WWE போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 47 வயதாகும் ஜான் செனா 2001ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமானார். அதன் பிறகு அதில் படு வேகமாக பிரபலமடைந்தார். WWE போட்டிகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்களில் ஜான் செனா முக்கியமானவர். 16 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}