- க.யாஸ்மின் சிராஜூதீன்
அம்மா சமையல் அறையிலே
பாப்பா அம்மா அருகிலே
சமையலில் அம்மா மும்முரமாம்
பாப்பா விளையாட்டில் பம்பரமாம்
சாதம் உளையில் கொதிக்குதாம்
பாப்பா அஞ்சறைப்பெட்டியை உடைத்ததாம்.....
அம்மா முகத்தில் கடுகு வெடித்ததாம்
பாப்பா முகத்தில் சிரிப்பு மலருதாம்...
முத்துப்பல்லை காட்டிச் சிரிக்குதாம்

அம்மா கோபம் பஞ்சாய் பறந்ததாம்
பாப்பாவுக்கு பரிசு கிடைத்ததாம்
விலைமதிப்பில்லா முத்த மழைதானாம்.....
அம்மாவுக்கு நிகர் அம்மாதான்
கடவுள் நமக்கு தந்த சிறந்த பரிசுதான்
கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான்
எப்போதும் நமக்கு பலம்தானாம்
பொக்கிஷமாய் காப்போம் நாமும்தான்......
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}