- க.யாஸ்மின் சிராஜூதீன்
பூக்களின் பல வண்ணம் பார்த்து ரசித்து மகிழலாம்...
வண்ணத்துப்பூச்சியின் பல வண்ணம் பார்த்து ரசித்து வியக்கலாம்....
மனிதர்களின் பல வண்ணம்
எண்ணத்தில், அன்பில், இன்பத்தில்,
துன்பத்தில், சண்டையில்,
விவாதத்தில் அரவணைப்பில்,
கடுஞ்சொல்லில் ....இன்னும் நீளுமே
இனம் புரியா பலவண்ணமே....
சாதகமான சூழ்நிலையில் இனிய வண்ணமே ...
விவாதத்தில் தெரியும் சுயவண்ணமே...
நல்லதோ கெட்டதோ வெட்ட வெளிச்சம் ஆகுமே.....

வார்த்தைகள் கூர்மையான ஆயுதமே
அதை ஆளத் தெரிந்தவன் பொறுமை சாலியே.....
அள்ளித் தெளிப்பவன் மீண்டும் அள்ள முடியாது என்று
அறியா அறியாமை இருள் சூழ்ந்தவனே.....
பணம் முக்கியம் தான்
அதற்காக குணம் இழக்காதே...
காலங்கருதினால் பணம் ஒரு பொருட்டல்ல..
பணம் ஒரு அத்தியாவசியம்
அதுவே நம்மை ஆளக்கூடாது
நாம்தான் வழிநடத்த வேண்டும்...
ஒவ்வொருவரும் பலதரப்பட்ட மனித
வண்ணங்களை படிக்க வேண்டும்...
சிறிதெனினும் நம் சுயமரியாதையை காக்க....
எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் மட்டும் படித்து
எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்....
தேவையற்றவைகளை புறந்தள்ள வேண்டும்.....
வண்ணம் பல வண்ணம் பச்சோந்தியே வியக்கும் வண்ணம்..
பலவண்ணம் மனித மனங்களின் எண்ணம்...
ரசிக்கும் வண்ணம் பெற்று ரசித்து வாழுவோம் உலகிலே....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}