சென்னை: கூகிளின் 'Year in Search 2025' பட்டியலில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட 10 சமையல் குறிப்புகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இதில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு ஐட்டமும் இருக்கு. அது என்னான்னு நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்.
2025ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட 10 சமையல் குறிப்புகள் இவைதான்:

இட்லி (Idli): எளிமையான, மென்மையான மற்றும் மனதுக்கு இதமளிக்கும் இட்லி, தேடல் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தென்னிந்தியாவில் இது மிகவும் பிரபலமானது. விதம் விதமான இட்லிகளை இப்போது நம்மவர்கள் கண்டுபிடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ன்ஸ்டார் மார்டினி (Pornstar Martini): பழச் சுவையுடன் கூடிய இந்த காக்டெய்ல், விருந்து மற்றும் பார்ட்டி இரவுகளுக்கான பிரபல தேடலாக மாறியது.
மோதக் (Modak): விநாயகர் சதுர்த்திக்காகத் தேடப்பட்ட பாரம்பரிய இனிப்பு இது. அதாங்க கொழுக்கட்டை. குறிப்பாக ஆவியில் வேகவைத்த உகடிச்சே மோதக் (Ukadiche Modak) குறிப்புகள் அதிகம் தேடப்பட்டன.
தேகுவா (Thekua): சத் பூஜை (Chhath Puja) சமயத்தில் செய்யப்படும், வெல்லம் கலந்த, எண்ணெயில் பொரித்த இந்த இனிப்புச் சிற்றுண்டி தேடலில் பெரிய எழுச்சியைக் கண்டது.
உகாதி பச்சடி (Ugadi Pachadi): ஆந்திரா மற்றும் தெலங்கானா புத்தாண்டு சிறப்பு உணவான இது, இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் காரமான சுவைகளின் தனித்துவமான கலவையாகும்.
யார்க்ஷைர் புட்டிங் (Yorkshire Pudding): பிரிட்டிஷ் சமையல் வகையைச் சேர்ந்த இந்த உணவு ஆச்சரியப்படும் விதமாக அதிக தேடல் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பீட்ரூட் கஞ்சி (Beetroot Kanji): வட இந்தியாவில் இருந்து வந்த, புரோபயாடிக் நிறைந்த இந்த பாரம்பரியப் பானம், ஆரோக்கிய விரும்பிகளிடையே விருப்பமான தேர்வாக இருந்தது.
கோண்ட் கடீரா பானம் (Gond Katira Drink): ஜெல்லி போன்ற அமைப்பைக் கொண்ட இந்த இயற்கையான குளிர்ச்சியூட்டும் பானம், கோடை காலத்தில் மிகவும் வைரலாகப் பரவியது.
திருவாதிரை களி (Thiruvathirai Kali): திருவாதிரைத் திருவிழாவின் போது அரிசி மாவு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் இந்தத் தென் இந்திய இனிப்பு உணவு.
கொழுக்கட்டை (Kolukattai): மோதக்கை (கொழுக்கட்டையை) டிரெண்டியான முறையில் கலந்து செய்யப்பட்ட ஒரு ‘ஃபியூஷன்’ (fusion) இனிப்பு. இது 'மோட்கா' என்ற பெயரில் வைரலாகத் தேடலுக்கு உள்ளானது.
என்னங்க இதுல உங்க ஐட்டமும் இருக்கா..!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}