சென்னை: 2024ம் ஆண்டின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு என்னவெல்லாம் நடந்தது என்று திரும்பிப் பார்க்கும்போது பல சுவையான விஷயங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் இந்த 2024ம் ஆண்டில் அதிக அளவில் கூகுள் தேடுதல் தளத்தில் தேடப்பட்ட உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளது கூகுள். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஐட்டத்துக்கும் இடம் கிடைத்துள்ளது. கண்டிப்பாக அது இட்லி தோசை, வடை கிடையாதுங்க.. ஆனால் அதை விட செம டேஸ்ட்டான உணவு வகை இது.
நாக்கில் வைத்ததும் சுள்ளென இறங்கி சுவை கொடுக்கக் கூடிய மாங்காய் ஊறுகாய் தான் அது. தேடுதலில் இந்த மாங்காய் ஊறுகாய்க்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவு வகைகள் இவைதான்

1. போர்ன் ஸ்டார் மார்ட்டினி (இங்கிலாந்து நாட்டில் மிகவும் பிரபலமானது இந்த பானம்)
2. மாங்காய் ஊறுகாய் (நம்ம ஊரு சைட் டிஷ்.. தயிர் சாதத்திற்கு செமத்தியான கூட்டாளி இது)
3. தனியா பஞ்சிரி (கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தின்போது பரிமாறப்படும் பிரசாதம் இது)
4. உகாடி பச்சடி (தெலுங்கு - கன்னட புத்தாண்டின்போது வைக்கப்படும் பச்சடி இது)
5. சார்னம்ரித் (இந்தியாவைச் சேர்ந்த இனிப்பு வகை இது.. இதுவும் ஜென்மாஷ்டமியினபோது தயாரிக்கப்படுவதாகும்)
6. இமா தட்ஷி (பூடான் நாட்டின் தேசிய உணவு இது. சில்லி பெப்பர், சீஸ் ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படும் பதார்த்தம்)
7. பிளாட் ஒயிட் (இது ஒரு வகையான காபி.. செம டேஸ்ட்டானதும் கூட)
8. கஞ்சி (நாம் தினசரி சாப்பிடும் கஞ்சி கிடையாது.. இது காய்கறிகள் உள்ளிட்டவை போட்டு தயாரிக்கப்படும் கஞ்சி. ஹோலி பண்டிகையின்போது இது பிரபலமாக தயாரிக்கப்படும்)
9. சங்கர்பாலி (வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை இது)
10. சம்மந்தி பொடி (கேரளாவில் பிரபலமானது இது. தேங்காய் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் இது, உறை நிலையில் உள்ள சட்னியாகும்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}