கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சேவை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் யோஷிதா கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை குற்ற புலனாய்வு காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திகா மனதுங்கா கூறுகையில், பெலியத்தாவில் வைத்து இன்று காலை யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு பிற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையில் லெப்டினன்ட் பதவி வகித்தவர் யோஷிதா ராஜபக்சே. மகிந்தா ராஜபக்சேவின் 2வது மகன் ஆவார். இவர் மீது பல வருடங்களாகவே பல்வேறு வகையான புகார்கள் இருந்து வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு கூட இவர் நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அப்போது நிதிக் குற்றம் தொடர்பான சிறப்புக் காவல்படை அவரைக் கைது செய்திருந்தது.
மகிந்தா ராஜபக்சேவுக்கு மொத்தம் 3 பிள்ளைகள். இதில் முதல் மகன் பெயர் நமல் ராஜபக்சே. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அடுத்தவர்தான் யோஷிதா ராஜபக்சே. கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 3வது மகன் பெயர் ரோஹிதா ராஜபக்சே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்றைய தங்கம் விலை ஏற்றமா?.. இறக்கமா?.. இதோ முழு விபரம்!
ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Extra-curricular activities.. மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்பதை ஊக்குவிப்போம்!
பெருகும் முதியோர் இல்லங்கள்.. வருத்தம்தான்.. ஆனாலும் ஒரு பாசிட்டிவ் பாயின்ட் இருக்கே!
இந்தியாவின் தாஜ்மஹால்.. காலத்தைத் தாண்டி நிற்கும்.. கம்பீர காதல் சின்னம்!
"இந்தாங்க டீச்சர் பூ".. சிறுகதை
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
{{comments.comment}}