திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்னர் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த சில மணி நேரத்திலேயே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த மர்ம நபர்கள் இளைஞரை நீதிமன்ற வாசலில் வைத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டுத் தப்பினர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது பற்றி அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், அவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்ததாகவும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2023ம் ஆண்டு கீழ நத்தத்தில் ஊராட்சி உறுப்பினராக இருந்து ராஜாமணி என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது கொலைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை அங்கிருந்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் கொலை நடந்த சற்று நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் பிடித்துள்ளனர். இதுவரை இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!
கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம்... இது தான் இன்றைய சென்னையின் அடையாளம்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}