டெல்லி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய சமயத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் தனது காதலியுடன் விஷம் குடித்துள்ளார். அதில் அவரது காதலி மரணமடைந்தார். அந்த இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் ரஜத் குமார். அவரும் அவரது நண்பர் நிஷு குமார் கடந்த 2022ம் ஆண்டு தேசிய அளவில் பிரபலமானார்கள். இருவரும் ரூர்க்கி பகுதியில் ஒரு பேக்டரியில் வேலை பார்த்து வருகின்றனர். 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த மெர்சிடிஸ் கார் பெரும் விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ரிஷாப் பந்த் படுகாயமடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ரஜத் குமாரும், அவரது நண்பரும்தான் மீட்டு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்து காப்பாற்றினார்கள். இது தேசிய அளவில் பேசுபொருளானது. குணமடைந்த பின்னர் இந்த இருவரையும் சந்தித்த ரிஷப் பந்த் அவர்களுக்கு நன்றி கூறினார். அவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தார். அவர்களை ஹீரோ என்றும் புகழாரம் சூட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜத் குமார் உயிருக்குப் போராடி வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜத் குமாரும் (வயது 25), மனு காஷ்யப் (21 வயது) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்தக் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பிப்ரவரி 9ம் தேதி முசாபர்நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்திற்குச் சென்ற இருவரும் அங்கு வைத்து விஷம் குடித்து விட்டனர். இதுகுறித்து ரஜத் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. விஷம் குடித்த நிலையில் இருவரும் மீட்கப்பட்டனர். இதில் மனு காஷ்யப் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ரஜத் குமாரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிப் பிரச்சினை காரணமாகவே இவர்களது காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல
எப்படி ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை நமக்கு இல்லையோ அதேபோலத்தான் நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் நமக்கு இல்லை. எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல.. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உரிய ஆலோசனைகளை நாடுங்கள். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
பிரச்சினைகள் தொடர்பாக தடுமாற்றமான மன நிலையில் இருந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொணடு உரிய ஆலோசனையைப் பெறத் தவறாதீர்கள்.
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
{{comments.comment}}