மும்பை: என் தந்தைக்கு மனநலம் குன்றி இருக்கிறது. ஆனால், அதை ஒப்பு கொள்ள மாட்டார். அது குறித்து அவர் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என தனது தந்தையின் சர்ச்சை பேச்சு குறித்து 2023ம் ஆண்டு யுவராஜ்சிங் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களாக இருந்தவர்கள் தான் யுவராஜ் சிங் மற்றும் தோனி. இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்காக மகத்தான சாதனை படைத்துள்ளனர். ஒரு கட்டத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் யுவராஜ் சிங். அதன்பின்னர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது.
இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் கெரியர் பாதிக்கப்பட்டதற்கு தோனிதான் காரணம் என்று அவ்வப்போது கூறி வருகிறார் யுவராஜின் தந்தையான யோக்ராஜ் சிங். இதுகுறித்து தோனி பதில் அளிப்பதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட தோனி குறித்து பேசிய யுவராஜ் தந்தை, தோனி தனது இறுதி காலகட்டத்தில் கையில் பணமே இல்லாமல் இருப்பார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்போது மீண்டும் ஒருமுறை தோனியை அவர் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், என் வாழ்நாளில் ஒருபோதும் தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்.
ஆனால், எனது மகனுக்கு எதிராக அவர் செய்த அனைத்தும் இப்போது வெளி வருகிறது. என்னிடம் தவறு செய்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன். தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்து விட்டார்.
யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார்.யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால், நீங்கள் பெற்று எடுங்கள். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக்கூட இதற்கு முன் இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார் எனக் கூறியிருக்கின்றனர். புற்றுநோயுடன் விளையாடிய 2011ஆம் உலகக் கோப்பை வென்று கொடுத்த அவருக்கு இந்திய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
தனது தந்தையின் பேச்சுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்ததாக தோனி ரசிகர்கள் யுவராஜ் சிங்கை சாடி வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நேர்காணலில் பங்கேற்ற யுவராஜ் சிங் தனது தந்தை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனது தந்தை ஒரு மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும். எனினும் தமக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!
பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!
Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!
ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!
செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்
{{comments.comment}}