டெல்லி: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்துள்ளது கிரிக்கெட் மற்றும் நடன உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 4 வருடத்திலேயே இந்த மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புகழ்பெற்ற நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ல் உற்சாகமான முறையில் கோலாகலமாக நடந்த திருமணம் இது. இப்போது இது முடிவுக்கு வந்து விட்டது.
யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவரும் தத்தமது பீல்டில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தனர். 2020-ல் இவர்கள் நிச்சயதார்த்த செய்து கொண்டார்கள், அப்போதே ரசிகர்கள் உற்சாகமாக இதை வரவேற்றனர். அதே ஆண்டில், அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

சோஷியல் மீடியாவில் தங்கள் காதலையும், சந்தோஷத்தையும் அடிக்கடி பகிர்ந்து வந்த இந்த தம்பதியினர், அவர்களின் உறவை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வந்தனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக எங்குமே செல்லவில்லை. இருவரையும் சேர்ந்து பார்ப்பதும் குறைந்து போனது. இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில்தான் இருவரும் தனித்தனியாக வாழ்க்கையை தொடர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும். விவாகரத்துக்கான காரணங்கள் பற்றி எந்த அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட அது உண்மையே என்று கூறப்படுகிறது.
சாஹல் தனஸ்ரீ ஜோடி, சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனால், இவர்களின் பிரிவானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த முடிவு எதிர்பார்த்ததாகக் கூறினாலும், சிலர் இது கண்ணுக்குத் தெரியாத வேதனை என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாஹல் தற்போது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனஸ்ரீ தனது நடன பயணத்தை தொடர்ந்து, புதிய நடனக் காணொளிகள் மற்றும் கல்வி வீடியோக்களுக்கான முயற்சிகளில் கவனம் செலுத்திவருகிறார். இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கத் தீர்மானித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
{{comments.comment}}