வீட்டுக்கு வீடு ஒரு "ஜெபி" இருந்தால்.. முதியோர் இல்லமே தேவைப்படாது!

Jul 20, 2023,09:35 AM IST
- பூஜா

லண்டன்:  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெபி என்ற இரண்டு வயது பூனை, தனது காதுகேளாத உரிமையாளருக்கு மிகுந்த உதவியாக இருப்பதற்காக தேசிய அளவிலான விருதைப் பெற்று அசத்தியுள்ளது.

ஜெபி பூனைக்கு "இந்த ஆண்டின் சிறந்த பூனை" என்ற பட்டத்தைப் பெற்று அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 21,000 ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றுள்ளது.

லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் விழாவில் ஜெபி பூனை ஃபேமிலி ஃபர்-எவர்  (Family Forever) என்ற பிரிவில் கலந்து கொண்டது. இறுதிச் சுற்றில் பங்கேற்ற நான்கு பூனைகளில் ஜெபிக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றது.



ஜெபி பூனையோட விசேஷம் என்ன தெரியுமா.. அதற்கு தனியாக சிறப்புப் பயிற்சி எதுவும் கொடுக்கப்பட்டதில்லையாம். இப்படி எந்த பயிற்சியும் தராமல்தான் அந்தப் பூனையானது உரிமையாளருக்கு பல வகைகளிலும் உதவி செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான பிற செல்லப்பிராணிகளிலிருந்து இந்த உயரிய விருதின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே முதலில் ஒரு பெரிய சாதனை தான். 

ஜெபியின் 66 வயதான உரிமையாளரின் பெயர் ஜெனிவீவ் மோஸ். இவருக்கு காது கேட்காது. எந்த சத்தத்தையும் உணர முடியாது. இவரது பிரச்சினையைப் புரிந்து கொண்ட ஜெபி தானாகவே இவருக்கு உதவத் தொடங்கியது. எப்படின்னா,  யாராவது காலிங் பெல் அடித்தால், உடனே மோஸை இது போய்த் தட்டி கதவைத் தட்டுகிறார்கள் என்று உணர்த்துமாம்.  அதேபோல போன் அடித்தாலும் அதை உணர்த்துமாம். தானாகவே இதையெல்லாம் அது செய்யத் தொடங்கியுள்ளது.

இது மட்டுமா செய்யுது ஜெபி.. அவரோட செருப்பை எடுத்து வந்து கொடுக்குமாம். போஸ்ட் பாக்ஸில் லெட்டர் போடப்பட்டிருந்தால் அதைப் போய் எடுத்து வந்து கொடுக்குமாம். இன்ன பிற பொருட்களையும் கூட கொண்டு வந்து மோஸிடம் கொடுக்குமாம். வீட்டுக்கு ஏதாவது டெலிவரி வந்தால் போய் சமத்தாக வாங்கிக் கொண்டு வந்து கொடுக்குமாம்.

இரவில் புதிதாக எதாவது சத்தம் கேட்டால், மோஸை எழுப்பி, அவருக்கு அதைத் தெரியப்படுத்த அவரது தலையில் அடிப்பது, அவரரது காது கேட்கும் கருவியை கழற்றி வைத்திருந்தால் அதை ஓடிப் போய் எடுத்து வந்து கொடுப்பது என்று தன் உரிமையாளரை சுற்றி சுற்றி வந்து ஒரு பிள்ளை போல பார்த்துக் கொள்கிறது. 

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி ஜெபியின் உரிமையாளர் என்ன சொல்கிறார் தெரியுமா?

"ஜெபி இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தனிமையிலும் இனிமை காண எனக்கு உதவும் என் உறவு ஜெபி. பூனைகள் எவ்வளவு அன்புடனும் அக்கறையுடன் இருக்கும், மேலும் அவை மக்களின் வாழ்க்கையில் என்ன நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உலகிற்குக் காட்டிய என் ஜெபியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று ஆனந்த கண்ணீருடன் கூறுகிறார். 

வீட்டுக்கு வீடு ஜெபி இருந்தால்.. எதிர்காலத்தில் முதியோர் இல்லமே தேவைப்படாது .. என்ன சொல்றீங்க?

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்