டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நடப்பு மத்திய அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும், நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதாலும் மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. பட்ஜெட் குறித்த நேரலைத் தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரி உச்சவரம்பும் உயர்த்தப்படவில்லை.
கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவு 596 பில்லியன் டாலராக இருந்தது. சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவிலான உதவிகள் செய்ததன் காரணமாக இந்தியாவில் 1 கோடி பெண்கள் லட்சாதிபகளாக உருவாகியுள்ளனர். 9 கோடி பெண்களுடன், உள்ள 83 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஊரக சமூக பொருளாதாரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடனாக ரூ. 1.3 லட்சம் கோடி கடன் உதவி. வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழே குறைக்க முயற்சிக்கிறோம். லட்சத்தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் துறைமுகத் தொடர்புகளை அதிகரிக்கவும், பிற வசதிகளை ஏற்படுத்தவும் முன்னுரிமை தரப்படும். மாநிலங்களுக்கு 50 வருட காலத்திற்கு வட்டியில்லாமல் ரூ. 75,000 கோடி கடன் திடடம் அமல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 40,000 ரயில் பெட்டிகளை வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
அடுத்த 5 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்படும். நிதித்துறை வலுவாக இருப்பதால் சேமிப்புகள், முதலீடுகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. வரி சீரமைப்பு நடவடிக்கைகளால் வரித்தளங்கள் அதிகரித்து, வலுவான நிலையில் உள்ளன. டிஜிட்டல் இந்தியா, இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தியுள்ளது. அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
மக்களின் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. எங்களது அரசு நிர்வாகம், வளர்ச்சி, செயல்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. உயர் கல்வித்துறையில் பெண்களின் பங்கு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு கிடைத்துள்ளது.
11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு முத்ரா திட்டத்தில் 30 கோடி முறை கடன் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
பண வீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா பேரிடர் காலம் பல நெருக்கடிகளைக் கொடுத்த போதிலும் அதிலிருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டு வந்தது. இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார காரிடார் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும்.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றம் விவசாயிகளுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்துத் திட்டங்களைத் தீட்டி வருகிறது - நிர்மலா் சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையிலிருந்து... நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமூக அடிப்படையிலும், புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமூக அடிப்படையிலும்,புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரேஷனில் இலவச உணவுப் பொருட்கள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம். மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!