தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

Jun 08, 2026,05:05 PM IST

சென்னை: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக (TANTRANSCO) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்காக சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.


சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகமான ‘டான்டிரான்ஸ்கோ’ (TANTRANSCO) ட்டிடத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முக்கிய தரவுகள் (Data) அடங்கிய கணினி ஹார்டு டிஸ்க்குகள் மர்மமான முறையில் திருடு போயின. மின்சார வாரியத்தின் மிக முக்கியமான திட்டங்கள், வரவு-செலவு கணக்குகள் மற்றும் ரகசிய ஆவணங்கள் இந்த ஹார்டு டிஸ்க்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


பாதுகாப்பு மிகுந்த மின் வாரிய தலைமை அலுவலகத்திலேயே இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியது, பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியது. இதுகுறித்து சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.


சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்?




இந்த வழக்கில் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், இது சாதாரண திருட்டுச் சம்பவமாக இல்லாமல், திட்டமிட்டு நடத்தப்பட்ட கார்ப்பரேட் குற்றமாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், திருடப்பட்ட தரவுகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை சென்னை காவல்துறை தீவிரப்படுத்தியது. 


வழக்கின் தன்மையையும், அதன் பின்னணியில் உள்ள மர்மங்களையும் முழுமையாக வெளிக்கொண்டு வர, இந்த வழக்கை ஒரு தனிப்படைப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை காவல்துறை தரப்பில் இருந்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது. சென்னை காவல்துறையின் பரிந்துரையை ஏற்று, டிஜிபி இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி அதிகாரிகள் விரைவில் இந்த வழக்கின் ஆவணங்களை சென்னை காவல்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டு, தங்களது விசாரணையைத் தொடங்கவுள்ளனர். மின் வாரிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மின் வாரிய தரவுகள் திருடப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி என்ன? இதன் மூலம் யாருக்கு ஆதாயம்? போன்ற பல கேள்விகளுக்கு சிபிசிஐடி விசாரணையின் முடிவில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மின் வாரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்