
காலை 11 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 95.33 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 16,288 பேருந்துகளில் 15,528 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு போன்ற 6 அம்ச கட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் செய்து வரும் நிலையில்,சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருடன் அண்ணா தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை தலைமை அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், சேலம், திண்டிவனம்,போன்ற பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவை சுங்கம் பணிமனை முன்பு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பஸ்களை மறித்து போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார் அமைச்சர் சிவசங்கர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை தொடங்கியுள்ளது.
மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை பாதி வழியில் நிறுத்தி கோவில்பட்டி அருகே பயணிகளை இறக்கி விட்டனர். பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்டதால் பயணிகள் தவிர்ப்புக்குள்ளாகினர். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஓட்டுநரிடம் தொலைபேசியில் பேசியதால் இறக்கி விட்டதாக பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்படவுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு மதியம் 2:15 மணிக்கு அவசர வழக்காக நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரிக்க இருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக,சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி பி. ஆர். ராமன் அமர்வில் இன்று மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
மதுரையில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 2069 பேருந்துகளில் 39 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை. கும்பகோணத்தில் 91% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 2,978 பேருந்துகளில் 2715 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் 99 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1617 பேருந்துகளில் 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.
சேலம் மாவட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 1,101 பேருந்துகளில் 1,079 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,051 பேருந்துகளில் 1952 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.