வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இன்னொரு காற்றழுத்த மண்டலமும் வலுவடைந்துள்ளது. மேலும் புதிய செய்திகளுக்கு தென்தமிழுடன் இணைந்திருங்கள்.

ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) சமர்ப்பிப்பு கடைசி நாள் வேகமாக நெருங்குகிறது. தேசிய மற்றும் மாநில ஓய்வூதியதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதிய வழங்கலில் தடங்கல் ஏற்படலாம். ஜீவன் பிரமானம் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்யும் வசதி உள்ளது. ஓய்வூதியம் தொடர வேண்டுமெனில் கடைசி தேதிக்கு முன் நடவடிக்கை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியை சந்தித்தது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்தியா, இரண்டாவது டெஸ்டிலும் 408 ரன்கள் வித்தியாசத்தில் பறிகொடுத்தது.தொடரை 2-0 என தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் உள்ள பிழைகளால் தொடரைக் கை விட்டன. வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கோப்பையை தக்க வைத்தது.

புதுச்சேரியில் டிசம்பர் 5 ம் தேதி த. வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு த.வெ.க நிர்வாகிகள் புதுச்சேரி காவல் ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் மதுபான கூட்டத்தில் மது அருந்திவிட்டு தகராறில் இருவரை அரிவாளால் வெட்டியதாக கோமு என்பவருக்கு போலீசார் வலைவீச்சு. மூவருக்கும் வாய்த்தகராறு துவங்கி நிலையில் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கோமு அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் அரியலூர் தஞ்சாவூர் திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக நவம்பர் 29ல் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூவிருந்தவல்லி அருகே வீரராக புரம் ஏரியில் காலாவதியான பால் மற்றும் ஐஸ்கிரீம் கொட்டியதால் பரபரப்பு.காலாவதியான து என்று தெரியாமல் ஒரு சிலர் பால் பாக்கெடுகளை எடுத்து சென்றதால் அதிர்ச்சி.தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகள் என குவியல் குவியலாக ஏரியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் ஏரி மாசுபாடும் அபாயம்.100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சுற்றுவட்டார மக்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் வளமாக பார்கப்படும் நிலையில் நீர் வளத்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். தலைமை செயலத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் 2500 கன அடி நீர் திறக்கப்படுகிறது என நீர்வளத்துறை அறிவிப்பு. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

( 2020ல் இருந்து 2022) ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் முதலிட்டார்களை அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிறுவனத்தில் உரிமையாளர் ராஜசேகர் துபாயில் அமலாக்கு துறையினால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இருக்கும்இன்னும் சில பேரை கைது செய்து இருப்பதாகவும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
பிரிட்டன் அரசு கடுமையான புதிய குடியேற்ற சட்டத்தை அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் வேலை விசாக்களுக்கு கூடுதல் நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!