
தமிழ்நாடு அரசு நடத்தும் TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. 1,00,709 வேலை வாய்ப்புகள் ரூபாய் 43,844 கோடி முதலீடுகள் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று ( 25/11/25) மாலை 5 மணியளவில் கையொப்பமாக உள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதம். 12.10 மணிக்கு துபாய் செல்லும் விமானம் 5 மணி நேரம் தாமதம். 12.50 மணிக்கு மும்பை செல்லும் விமானம் 2.55 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு

உடுமலைப்பேட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்கஇரண்டாவது நாளாக தடை.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது இது மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்ககடலில் புயலாக வலுப்பெறும். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் தனியார் உயிரி மருத்துவ சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செய்யும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் தங்கள் கடைகளை அடைந்துள்ளனர்.
எஸ் ஐ ஆர் தொடர்பாகவும் பூத் கமிட்டி பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளருடன் காணொளி காட்சி மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாகூர் தர்காவில் 468 வது கந்தூரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு டிசம்பர் 1 ந்தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தொடர்ந்து 3 நாட்கள் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும் என நாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அங்கு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அணைகளிலும் 10% சதவீதம் நீரை குறைக்குமாறு தமிழக நீர்வளத் துறை உத்தரவு
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்