சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு முதல் முறையாக இலங்கையின் திரிகோணமலையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 1000 பொங்கல் பரிசுக்கான டோக்கன் நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளது. ரேஷன் கடைகளில் இந்த ரொக்கப் பரிசு, பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் பாதை சீரமைக்கப்பட்டு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. மேலும் லேட்டஸ்ட் செய்திகளை அறிய இந்த பக்கத்துடன் இணைந்திருங்கள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 10ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூபாய் 1000 ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வருகின்ற 10 தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும்.13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் 14ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படக் குழு அசத்தலான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்துடன், கபில்தேவும் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் இன்று தனது இறுதிச் சுற்றுப் பாதையில் நுழையவுள்ளது. இந்திய விண்வெளித்துறையின் வரலாற்று சாதனைகளில் இதுவும் இடம் பிடிக்கிறது.
காங்கோ நாட்டில் பெய்து வரும் அதிக மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரியில் இதுவரை 43,750 வீடுகள் இடிந்ததாக காங்கோ அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்த விழாவில், ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் தனது கணவரை எப்படிக் காப்பாற்ற முடிந்தது என்பது குறித்து ஒரு பெண் விவரித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
சென்னை ஓட்டேரி பின்னி பின்னி மைதானத்தில் தீபக் நாத் என்ற 23 வயது இளைஞர், போதை மருந்து ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் மயங்கி மரணமடைந்தார். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 11க்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயபாஸ்கர் இன்று ஆஜரான நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள வணிகத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் நேற்று இரவு முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு உதவி வணிக வரித்துறை அதிகாரியை, லஞ்சம் கேட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
நடிர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர்கள் எம். எஸ் பாஸ்கர், ஸ்ரீநாத் ஆகியோர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.