சென்னை: தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாமல் மழை பெய்கிறது. கன மழை காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ,உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மரக்காணம் கந்தாடு ஏரி உடைந்து 5 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. கந்தம் பாளையம், காணி மேடு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் ஓடி ஆறு போல் காட்சியளிக்கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்பரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து தீவிரமாக உள்ளது. நான்காவது வருடமாக இந்த வருடமும் ஜனவரியில் மழை தொடர்கிறது. 2 நாட்களுக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும். தென் மாவட்டங்களில் மழை தொடரும். சென்னைக்கு அதி கன மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்.
சீர்காழியில் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளையும் சூழ்ந்தது வெள்ள நீர். சீர்காழி அருகே உள்ள புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது.
கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கரையோரம் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது இதனால் அடுத்த சில நாட்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொள்ளிடம், புவனகிரி, மீனம்பாக்கம், நன்னிலம், சேத்தியாந் தோப்பு, அண்ணாமலை நகர், திருத்துறைப்பூண்டி, காட்டுமன்னார்கோவில், குடவாசல், மரக்காணம், கொத்தவாஞ்சேரி, லால்பேட்டை, வானூர், கடலூர், உள்ளிட்ட 17 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய இடங்களில் அதி கன மழை பதிவாியுள்ளது. அதேபோல 56 இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செமீ மழை கொட்டி தீர்த்தது. சிதம்பரத்தில் 23 செமீ மழையும், வேளாங்கண்ணியில் 22 செமீ மழையும், திருவாரூர் மற்றும் நகையில் தலா 21 செமீ மழையும் பெய்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.