2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பட்ஜெட் உரையை அவரிடம் காட்டி வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

ரூ. 10 லட்சம் வரையிலான வீடு, வீட்டு மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துக்களை பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்திலிருந்து 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். 1.4.2025 முதல் இது அமலுக்கு வரும்.
வருவாய் பற்றாக்குறை 1.17 சதவீதமாக குறையும் நிலையில் 10 ஆண்டுக்கு முந்திய நிலையை எட்ட கூடும். வரும் நிதி ஆண்டில் கடன் அளவு 26.07 சதவீதமாக குறையும்.
மத்திய அரசின் உதவி மானியம் ரூபாய் 23 ஆயிரத்து 834 கோடியாக இருக்கும். சொந்த வரி வருவாய் 14.6 சதவீதமாக அதிகரிக்கும். தேசிய பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு 9 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவிக்கும் நிதி 4% மட்டுமே.
நிதி பற்றாக்குறை 1.37 சதவீதமாக இருக்கும்.
மாநில அரசுக்கான மத்திய அரசின் வரிப்பங்கு குறைந்து வருகிறது. வரும் நிதி ஆண்டில் மாநில வரி வருவாய், ரூபாய் 2.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் உருவாக்க ரூபாய் 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.jpg)
தமிழ்நாட்டின் ஜிடிபி ஐ துல்லியமாக கணக்கெடுக்க ரூபாய் ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, உள்ளிட்ட நகரங்களில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூபாய் 30 கோடியில் சீரமைக்கப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் மேற்பட்டோருக்கு விலையின்றி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் நிதியாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் .
சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூபாய் 110 கோடியில் புதிதாக 190 குடியிருப்புகள் கட்டப்படும்.
கோயம்புத்தூரில் 12.5 km நீளத்திற்கு ரூபாய் 348 கோடியில் மேற்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். திருநெல்வேலியில் 12.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 225 கோடியில் மேற்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.