Live News

Live updates பட்ஜெட் 2024: தங்கம் வெள்ளிக்கு சுங்க வரி அதிரடி குறைப்பு

author
  • Jan 19, 2025,05:19 PM IST
  • Share
Connect with me on

டெல்லி: மத்திய பட்ஜெட் 2024-25 இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். மேலும் செய்திகளுக்கு நேரலையில் இணைந்திருங்கள்.


Live Updates
  • Jul 23, 2024
    12:30 PM IST

    வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை

    புதிய வருமான வரி விகிதங்கள்


    வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை

    ரூ. 3 முதல் 7 லட்சம்  - 5%

    ரூ. 7 முதல் 10 லட்சம் - 10%

    ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் - 15%

    ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம்  - 20%

    ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30%


  • Jul 23, 2024
    12:22 PM IST

    கடல் உணவுகள் மீதான வரி குறைப்பு

    இறால் உணவு, மீன் உணவு மீதான இறக்குமதி வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்படும். இதனால் இவற்றின் விலை குறையும். இணைய வழி வணிக நிறுவனங்களுக்கான TDS 0.1% குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • Jul 23, 2024
    12:20 PM IST

    தங்கம்,வெள்ளி மீதான சுங்கவரி குறைப்பு

    தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல் பிளாட்டின மீதானம் சுங்கவரி  6.5 சதவீதமாக குறைக்கப்படும். சுங்க வரி குறைக்கப்படுவதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

  • Jul 23, 2024
    12:19 PM IST

    புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு

    புற்றுநோயாளிகளுக்கான மேலும் மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படும். இதனால் செல்போன் விலை குறைய வாய்ப்பு

  • Jul 23, 2024
    12:16 PM IST

    விரைவு சாலை திட்டம்

    பாட்னா டூ பூர்னியா விரைவு சாலை, பக்சால் டூ பாகல்பூர் விரைவு சாலை, புத்தகயா டூ வைஷாலி சாலை போன்ற புதிய சாலை கட்டப்படும். இந்த விரைவு சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூபாய் 26 ஆயிரம் கோடியில் இரண்டு பாலங்கள் அமைக்கப்படும்.  ஆந்திராவை பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 15,000 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


  • Jul 23, 2024
    12:15 PM IST

    கடன் உத்திரவாத திட்டம்

    சிறு குறு நடுத்தர தொழில்கள், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன்கள் உத்திரவாத திட்டம் செயல்படுத்தப்படும்.  கடன் உத்திரவாத திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  நகர்ப்புறங்களில் ஒரு கோடி ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்திற்கான ரூபாய் 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.


  • Jul 23, 2024
    12:14 PM IST

    விண்வெளி ஆராய்ச்சி திட்டம்

    விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • Jul 23, 2024
    12:10 PM IST

    பீகார் மாநிலத்திற்கு பல சிறப்பு திட்டங்கள்

    பீகாருக்கு சாலை மேம்பாடு, நீர்ப்பாசனம், வெள்ளை தடுப்பு, கோயில்கள் மேம்பாடு, உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் அசாம் உத்தரகாண்ட் இமாச்சல் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.

  • Jul 23, 2024
    11:55 AM IST

    வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

    வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூபாய் ரூ. 2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் 63 ஆயிரம் பழங்குடி கிராமங்களில் வசிக்கும் ஐந்து கோடி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

  • Jul 23, 2024
    11:54 AM IST

    புதிய தொழில் பூங்காக்கள்

    நாடு முழுவதும் 12 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

  • {{val.updatedDate | dateToISO | date : "MMM dd, yyyy" }}
    {{val.updatedDate | dateToISO | date : "hh:mm a" }} IST

    {{val.headLine}}

மேலும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்