- பசுங்கிளி
மாலை நேர டீ-யும், மொறுமொறு ஸ்நாக்ஸும் கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் குழந்தைகள் "கீரை வேண்டாம்" என்று ஓடும்போது, அவர்களை ஏமாற்றி ஆரோக்கியமாக சாப்பிட வைக்க இதோ ஒரு ஜாலியான மாஸ்டர் பிளான்!
கீரையை தட்டில் பார்த்தால் முகம் தூக்கும் குட்டீஸை, இந்த போண்டாவை பார்த்ததும் பிளேட்டோடு ஓட வைக்க ஒரு சூப்பரான ரெசிபி இதோ:
கலகலப்பான அரைக் கீரை போண்டா.. இதுதாங்க நாம இன்னிக்கு சாப்பிடப் போறோம்.. வாங்க செஞ்சு பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு: 1/4 கிலோ
முட்டை: 1 (இதுதான் நம்ம போண்டாவை சாஃப்ட்டாக்கப் போற சீக்ரெட்)
சின்ன வெங்காயம்: 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
அரைக் கீரை: 1 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை: 1 கப் (மணத்துக்காக!)
கருவேப்பிலை: சிறிதளவு
மிளகாய் தூள்: 1 டீஸ்பூன்
சோடா மாவு: 2 சிட்டிகை
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்: பொரிப்பதற்குத் தேவைக்கேற்ப
செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மிளகாய் தூள், மாவு சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், அரைக்கீரை, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றுடன் அந்த மசாலாவைச் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கிக் கொள்ளவும். இதனுடன் கடலைமாவு மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
தண்ணீரை ஊற்றிவிட்டு ஓவராகக் குழப்பிவிடாமல், போண்டா உருட்டும் பதத்திற்கு (இட்லி மாவு பதத்தில்) கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து, சின்னச் சின்ன உருண்டைகளாகப் கிள்ளிப் போடவும். போண்டா தங்கம் போல பொன்னிறமாக வந்ததும் அள்ளியெடுத்தால் வேலை முடிந்தது!
"கீரை உடம்புக்கு நல்லது" என்று சத்தம் போடாமல், இந்த போண்டாவை மட்டும் தட்டில் வைத்தால் போதும்... தட்டு காலியாவது தெரியாது!
என்னங்க.. மழைக்காலத்துக்கேற்ற மொறுமொறுப்பான சுவையான சத்தான அரைக் கீரை போண்டா செய்வது எப்படின்னு நாங்க சொல்லிக் கொடுத்துட்டோம்.. அதை செஞ்சு சாப்பிட்டு குஷியாக வேண்டியது உங்களது கடமை!
போண்டா, எப்படி இருந்துச்சுன்னு மறக்காம கமெண்ட்ல வந்து சொல்லிட்டுப் போங்க
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!
2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!
பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!
{{comments.comment}}