மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள காவல் தெய்வம் தான் கரும்பாறை முத்தையா. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிறந்த பெண் குழந்தை முதல் வயதான பாட்டி வரை உள்ள யாருக்கும் இத்திருவிழாவில் அனுமதி கிடையாது. இங்கு வெட்டப்படும் ஆடுகளும் இந்த கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

இந்தாண்டிற்கான கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. 2500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு கறி விருந்து படையல் செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்காக மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த கறி விருந்து திருவிழாவில் முதலில் இலைகளில் கறி வைக்கப்படும், அதன்பின்னர் சாதமும் குழம்பும் ஊற்றப்பட்டு அன்னதானம் நடைபெறும். கறிவிருந்து சாப்பிட்ட இலைகளை யாரும் எடுக்க மாட்டார்களாம். அந்த இலைகள் காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து தான் பெண்கள் அந்த கோவிலுக்கு சாமி குப்பிட வருவார்களாம்.அடுத்த ஆண்டு நடக்கும் திருவிழாவிற்காக ஆடுகள் தற்பொழுதே காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}