பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

Feb 20, 2026,06:04 PM IST

சென்னை : பாமக கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி தரப்பிற்கான தான் தேர்தல் கமிஷன் சொல்லி இருந்தது. இதை எதிர்த்து ஏற்கனவே உரிமையியல் கோர்ட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


இது தான் பல மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறதே, இதில் என்ன சுவாரஸ்யம் என நினைக்க வேண்டாம். இந்த வழக்கு தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, கோர்ட் வளாகத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் வழக்கு விபரம் குறித்து விளக்கியதுடன், "மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருப்பது டாக்டர் ராமதாஸ் கையெழுத்து தானா? அல்லது அவரது கையெழுத்தை வேறு யாராவது போட்டு, வழக்கறிஞரின் துணையுடன் இந்த மனுவை தாக்கல் செய்தார்களா என்ற சந்தேகம் வருகிறது. இதற்கு முன் தேர்தல் கமிஷனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இருக்கும் கையெழுத்து, முந்தைய மனுக்களில் இருந்த கையெழுத்தில் இருந்து இது வேறுபட்டதாக உள்ளது" என்ற பகீர் தகவல் ஒன்றை தெரிவித்தார்.




தான் பாடுபட்டு வளர்த்த கட்சியின் சின்னத்தை முடக்க ராமதாசே மனுத்தாக்கல் செய்வாரா? அந்த அளவிற்கு கட்சி நலனை தாண்டி அவருக்கு மகன் அன்புமணி மீது கோபம் உள்ளதா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில், மனுவில் இருப்பது ராமதாஸ் கையெழுத்தே இல்லை என வழக்கறிஞர் சந்தேகம் கிளப்பி உள்ளதால், அப்படியானால் ராமதாசுக்கு தெரியாமலேயே அவரே சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது. 


மகன் அன்புமணி இருப்பதால் என்டிஏ கூட்டணியில் இணைய கூடாது என ராமதாஸ் பிடிவாதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு அவருக்கு நெருக்கமான சிலர், தங்களின் சுய ஆதாயத்திற்காக திமுக பக்கம் ராமதாசை கொண்டு வர கடுமையாக முயற்சி செய்து வருகிறார்களாம். ஆனால் ராமதாசை கூட்டணியில் சேர்க்க திருமாவளவன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒருவேளை திருமாவளவன் ஒப்புக் கொண்டு, ராமதாஸ் திமுக கூட்டணியில் இருந்தால், அவரிடம் கட்சியும், சின்னமும் இல்லாததால் திமுக.,வின் உதய சூரியன் சின்னத்தில் நின்று தான் போட்டியிட வேண்டும். 


ஒருவேளை தனிச்சின்னத்தில் டாக்டர் ராமதாஸ் போட்டியிட்டால் கூட, இத்தனை காலமாக திருமாவளவனை எதிர்த்து அரசியல் செய்து விட்டு, தற்போது மகன் மீதுள்ள கோபம் காரணமாக கட்சி நலனை கருதாமல் திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் போல் ராமதாஸ் சேர்ந்து விட்டாரே என்ற அதிருப்தியும், அவப்பெயரும் ராமதாஸ் பெற வேண்டி இருக்கும்.


இதுவரை திருமாவளவனை எதிரியாக பார்த்து வந்த வன்னியர் சமூகத்தினரின் வெறுப்பும், கோபமும் ராமதாஸ் பக்கம் திரும்பும் நிலையும் ஏற்படும். இதனால் இத்தனை காலமாக அவர் சேர்த்து வைத்த செல்வாக்கு, தனது சமூக மக்களின் நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றையும் ராமதாஸ் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதோடு, வன்னியர் சமூகத்திற்கான பிரதிநிதி என்ற எண்ணம் அன்புமணி மீது உருவாகும். 


அப்படி நடந்தால், டாக்டர் ராமதாஸ் ஆதரவு ஓட்டுக்கள் தானாக அதிமுக அணியில் இருக்கும் அன்புமணி பக்கம் சென்று விடும். அதோடு அன்புமணியின் செல்வாக்கும் பல மடங்கு உயர்ந்து விடும்.  ஏற்கனவே கட்சி, சின்னம் ஆகியவை அன்புமணியிடம் இருப்பதால் அவர் பக்கம் செல்லலாமா என யோசித்துக் கொண்டிருப்பவர்கள், ராமதாஸ் திமுக பக்கம் சென்றால் உடனடியாக அன்புமணியின் கரத்தை வலுப்படுத்த சென்று விடுவார்கள்.


அப்படி நடந்தால் இது திமுக, ராமதாஸ் இருவருக்குமே மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும். அதோடு, உடன் இருக்கும் சிலர் என் அப்பாவிற்கு எதிராக சதி செய்கிறார்கள் என அன்புமணி இதுவரை கூறி வந்த குற்றச்சாட்டுக்களும் உண்மை என்று ஆகி விடும். இப்போது ராமதாசின் கையெழுத்தே போலி என வழக்கறிஞர் எழுப்பி உள்ள சந்தேகம், அன்புமணி முன்பு சொன்ன சந்தேகங்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்து விவகாரத்திற்கு விளக்கம் அளித்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் ராமதாஸ் தற்போது தள்ளப்பட்டுள்ளார். ஆனால் அவர் தரப்பில் எந்த விளக்கமோ, மறுப்போ இதுவரை சொல்லப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்