த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

Feb 20, 2026,06:04 PM IST

சென்னை: பிப்ரவரி 23ம் தேதி வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23, 2026 (திங்கட்கிழமை) அன்று வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.




சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய இடவசதி, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க க்யூ-ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.


பிப்ரவரி 23ம் தேதி வேலூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி. QR Code கொண்ட அனுமதிச் சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்