சென்னை: 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
2024-24ஆம் கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,23,261 பேர் எழுதினர். இதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன.

இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் பட்டியல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பத்தாம் மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டிய வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாளே (மே 16ஆம் தேதி) வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in, http://www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in, http://www.dge.tn.gov.in ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஒன்பதாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே மே எட்டாம் தேதி வெளியானதை போலவே பத்தாம் வகுப்பு பொது முடிவுகளும் முன்கூட்டியே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}