மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 11 பேர் பலி.. 60 பேர் காயம்!

Feb 06, 2024,05:21 PM IST

போபால்: மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசு வெடித்து சிதறியது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. 




தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். விபத்தில் சிக்கிய பலர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


உதவிக்கு தேசிய பேரிடர் மீட்புப்  படையும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார். தீ விபத்தின் போது சுமார்  150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாக தெரிகிறது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.


பிரதமர் மோடி இரங்கல்


இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.  விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


இந்த விபத்தின் போது தீ கொழுந்து விட்டு எரிந்ததில் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவி உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். 

சமீபத்திய செய்திகள்

news

என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்

news

Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

news

C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

news

பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?

news

போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!

news

பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்