எலூரு, ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் ஒரு 11 வயது சிறுவன் போலீஸில் கொடுத்த சாதாரண புகாரை போலீஸார் விசாரிக்கப் போனபோது, அவனது சித்தி செய்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
எலூரு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான லட்சுமி. இவர் கோத்தபேட்டா என்ற இடத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் மீது எலூரு காவல் நிலையத்தில் 11வயதான சிறுவன் ஒருவன் புகார் கொடுத்தான். என்ன காமெடி என்றால் அந்த சிறுவன் சட்டை போடமல், இடுப்பில் ஒரு துண்டை மட்டும் சுற்றியபடி வந்திருந்தான். அவனைப் பார்த்த போலீஸார் என்னடா இது என்று அவனை கூப்பிட்டு விசாரித்தனர். அப்போது சிறுவன் அவர்களிடம், லட்சுமி எனது வளர்ப்புத் தாய். எனது நண்பனின் பிறந்த நாளுக்கு நான் போக வேண்டும். இதற்காக வெள்ளைச் சட்டை கேட்டேன். சித்தி கொடுக்க மறுக்கிறார். அதனால்தான் துண்டைக் கட்டியபடி வந்தேன் என்று கூறியுள்ளான்.
புகாரைக் கேட்ட போலீஸார் சிரித்துக் கொண்டனர். இதெல்லாம் ஒரு பிரச்சினையாடா என்று கேட்ட அவர்கள், அவனது சித்தியை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போதுதான் தனது சித்தி தனக்கு செய்த கொடுமைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட ஆரம்பித்தான் சிறுவன்.
அதாவது சிறுவனின் தந்தை பெயர் மல்லிகார்ஜூன ராவ். இவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி ஆவார். சரியான வருமானம் இல்லை. லட்சுமி, மல்லிகார்ஜுனாவின் 2வது மனைவி ஆவார். சிறுவனின் தாயார் இறந்து விட்டார். மல்லிகார்ஜூனா வேலைக்குப் போன பின்னர் சிறுவனை சித்திரவதை செய்து வந்துள்ளார் லட்சுமி. இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி சூடு போடுவது, அடிப்பது என்று கொடுமை செய்து வந்துள்ளார்.
முன்பு இப்படித்தான் ஒருமுறை கடுமையாக அடித்ததில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பற்றினார்களாம். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் லட்சுமியை கடுமையாக எச்சரித்தனர். இனிமேல்இது போல கொடுமைப்படுத்தக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
{{comments.comment}}