சென்னை: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பாடத்திட்டத்தில் 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் எழுதினர். இதனை அடுத்து தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிவுகளும் விரைவில் முடிவடைந்தன. இதனால் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதிக்கு பதிலாக, மே 17ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். மாநிலம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}