12th Fail.. நடிப்புக்கும் சினிமாவுக்கும் குட்பை சொன்னார் நடிகர் விக்ராந்த் மாசே

Dec 02, 2024,10:56 AM IST

மும்பை: 12த் பெயில் என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விக்ராந்த் மாசே திரையுலகுக்கு குட்பை சொல்லி விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

12த் பெயில் மட்டுமல்லாமல், செக்டார் 36, சபர்மதி எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட்டான படங்களைக் கொடுத்து திரை ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தவர்தான் விக்ராந்த் மாசே. வெறும் 37 வயதுதான் ஆகும் விக்ராந்த் திடீரென நடிப்புக்கும், சினிமாவுக்கும் குட்பை சொல்லியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்  விக்ராந்த். 2025ம் ஆண்டுடன் தான் சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில வருடங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவையாக எனக்கு அமைந்தது. எனக்கு ஆதரவு கொடுத்த அத்தனை பேருக்கும் எனது மிகப் பெரிய நன்றிகள். ஒவ்வொருவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். அதேசமயம், எனது குடும்பப் பணிகளைப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்துள்ளேன். ஒரு கணவராக, ஒரு தந்தையாக, ஒரு மகனாக, ஒரு நடிகராக எனது பணிகளில் கவனம் செலுத்தப் போகிறேன்.



எனவே வருகிற 2025ம் ஆண்டு கடைசியாக ஒருமுறை சந்தித்துக் கொள்வோம். கடைசியாக நான் நடித்த2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளைக் கொடுத்துள்ளது. அதற்காக நன்றிகள். எல்லாவற்றுக்கும் எனது நன்றிகள். என்றென்றும் உங்களுக்குக் கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் விக்ராந்த் மாசே.

தற்போது விக்ராந்த் யார் ஜிக்ரி மற்றும் அங்கோன் கி குஸ்தகியான் என இரு படங்களில் நடித்து வருகிறார். இதை முடித்து விட்டு அவர் சினிமாவை விட்டு விலகுவார் என்று தெரிகிறது.

விக்ராந்த்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். பாலிவுட்டின் அடுத்த இம்ரான் கானாக மாறுகிறார் விக்ராந்த் என்றும் பலர் கூறியுள்ளனர். இம்ரான் கானும் இப்படித்தான் குடும்பமே முக்கியம் என்று கூறி திடீரென நடிப்பை விட்டு விட்டுப் போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

டிவி நடிகராக இருந்து ஓடிடி படங்கள் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்தவர் விக்ராந்த் மாசே. தூம் மச்சா தூம் என்ற டிவி தொடர் இவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது.  தொடர்ந்து பல முக்கியத் தொடர்களில் நடித்தார். பிறகு ஓடிடியில் வெளியான இவரது படங்கள் ரசிகர்களைக் கவரவே பெரிய திரைக்கும் வந்தார்.

12த் பெயில் படம் இவருக்கு பெரிய ஸ்டார்டமைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  விக்ராந்த் விலகல் நல்ல சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இழப்புதான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்