நண்பர்களுக்காக வைத்த இஃப்தார் விருந்தில் தீவிபத்து.. 16 பேர் பலி..  துபாயில் துயரம்

Apr 17, 2023,03:06 PM IST
துபாய் : துபாயில் தனது நண்பர்களுக்காக இஃப்தார் விருந்து தயாரித்து கொண்டிருந்த கேரள தம்பதி உள்ளிட்ட 16 பேர் அபார்ட்மென்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் ரிஜிஸ் களங்கதன் (38). இவர் துபாயில் உள்ள சுற்றுலாத்துறை கம்பெனி ஒன்றில் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெசி கண்டமங்களத் (32). இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்துவான இவர்கள் சமீபத்தில் சித்திரை விஷூ கொண்டாடி உள்ளனர்.



இது ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் தங்களுடைய அக்கம் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் உள்ளிட்டோருக்கு இஃப்தார் நோன்பு திறப்பின் போது அளிப்பதற்காக விஷூசத்யா என்ற பாரம்பரிய கேரள உணவு வகையை தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களின் பக்கத்து பிளாட்டில் ஏற்பட்ட தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அபாட்மென்ட் கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் போனதே விபத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த கேரள தம்பதி வருடந்தோறும் அனைவரையும் ஓணம் மற்றும் விஷூ பண்டிகைக்காக அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தீ பரவியபோது அபார்மென்டில் இருந்து வெளியே வரும் போது தான் கேரள தம்பதியை கடைசியாக அவர்கள் பார்த்ததாகவும், தாங்கள் பார்த்த போது ஜெசி அழுது கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பிறகு அவர்களுக்கு போன் செய்த போது, அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. உயிரிழந்த கேரள தம்பதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பலருக்கும் பல உதவிகள் செய்து வந்துள்ளனர். சனிக்கிழமை அன்று பகல் 12.35 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. உடனடியாக துபாய் குடிமக்கள் பாதுகாப்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பகல் 2.42 மணி வரை தீ எப்பகுதியில் எரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பகல் 3 மணியளவில் கிரேன் மூலம் மூன்றாவது மாடியில் இருப்பவர்களை வெளியேற்றி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அழியா காதலில் நீயும் நானும்

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

காலம் பொன் போன்றது

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!

news

சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!

news

World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்